சூஃபி இசை.. மெஹந்தி நிகழ்வு.. 450 வருட பாரம்பரிய கோட்டையில் ஹன்சிகா திருமணம்!



நடிகை ஹன்சிகாவின் திருமணம் தொடர்பான சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி உள்ளன



ஹன்சிகா தனது இன்ஸ்டாவில் அவரது வருங்கால கணவர் சோஹைல் கதுரியாவுடன் புகைப்படங்களை பதிவிட்டார்



Marry Me என்ற வாசகத்தின் முன்பு ஹன்சிகாவிடம் சோஹைல் ப்ரோபோஸ் செய்யும் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது



இதன்மூலம் ஹன்சிகாவின் திருமண செய்தி உறுதியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்



ஹன்சிகா - சோஹைல் திருமணம் டிசம்பர் 4 ஆம் தேதி நடக்க இருக்கிறது



அதற்கு முன்னதாக டிசம்பர் 2 ஆம் தேதி சூஃபி இசை கச்சேரியுடன் திருமண விழா தொடங்குகிறது



தொடர்ந்து அடுத்த நாளான டிசம்பர் 3 ஆம் தேதி மெஹந்தி வைக்கும் நிகழ்வு மற்றும் சங்கீத் நிகழ்வும் நடக்கவிருக்கிறது



ஜெய்ப்பூரில் உள்ள 450 வருட பழமையான முண்டோடா அரண்மனையில் திருமணம் நடக்கவிருக்கிறது



ஹன்சிகாவும் தனது திருமணத்தை ஒளிப்பரப்பும் உரிமையை ஓடிடி நிறுவனத்திற்கு கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது