கி.மு 45ல் ஜூலியஸ் சீசர் 'ஜூலியன் நாட்காட்டி'யை அறிமுகப்படுத்தினார். மார்ச் முதல் ஜனவரி 1 வரை நிர்ணயம் செய்தார்.

Published by: குலசேகரன் முனிரத்தினம்

ஜனவரி மாதம் ரோமானிய புராணங்களின்படி இரண்டு முகங்களைக் கொண்ட 'ஜானஸ்' என்ற கடவுளின் பெயரால் அழைக்கப்படுகிறது.

உலகளவில் சுமார் 150 க்கும் மேற்பட்ட ஒரே நாளில் கொண்டாடப்படும் ஒரே பொது விடுமுறை ஜனவரி 1.

புத்தாண்டு நாளின்போது உறுதிமொழி எடுக்கும் வழக்கம் பண்டைய பாபிலோனியர்களிடமிருந்து வந்தது.

சமாதானத்தை வளர்க்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை ஜனவரி 1ஆம் தேதியை 'உலக குடும்ப தினமாக' அறிவித்தது.

வானியல் படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரத்தில் பூமி சூரியனுக்கு மிக அருகில் வரும்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 அன்று காலாவதியான பல பழைய புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் கலைப் படைப்புகள் மீதான பதிப்புரிமை நீக்கப்பட்டு, அவை 'பொது களத்திற்கு' வரும்.

பெல்ஜியம் பிரேசில் சீனா போன்ற பல நாடுகளுக்கு ஜனவரி 1 முதல் அதிகாரப்பூர்வ நிதி ஆண்டு தொடங்குகிறது.

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெறும் பிரம்மாண்ட பட்டாசு விழா ஜனவரி 1 ஆம் தேதி தொடங்குவதற்கு ஒரு உலகளாவிய சின்னமாக இருக்கும்.

கிறிஸ்தவ மதத்தில் இன்று 'இயேசு கிறிஸ்துவின் நாம தினமாக' கொண்டாடப்படுகிறது.