தல பெயர் எப்படி வந்தது? ஏ.ஆர்.முருகதாஸ் பகிர்ந்த கதை
என்னோட ரூம்மில் மோகன் என்பவர் இருந்தார். அவரது சொந்த ஊர் தாம்பரம்
அவருக்கு பல ரவுடிகளுடன் தொடர்பு இருந்தது. அவர் என்னிடம் சம்பவம் ஒன்றை சொன்னார்
அந்த சம்பவத்தில் ஒரு ரவுடி கும்பல் ஒருவரை வெட்ட சென்றுள்ளது. வெட்டும் நேரத்தில் அந்த நபர் ஒரு கடவுளின் பெயரை சொல்லி கத்தியிருக்கிறார்.
அவர் வேண்டிய கடவுள், வெட்ட போனவருக்கு மிக பிடித்தமான கடவுளாக இருந்த நிலையில்,
அந்த நபர் அவரை நான் வெட்டமாட்டேன் என்று சொல்லியிருக்கிறார். இதனைக் கேட்ட பக்கத்தில் இருந்த ரவுடி ஒருவர் ‘தள்ளு தல’ நான் வெட்றேன் என்று அந்த நபரை வெட்டினாராம்.
இந்தக் கதையை அவர் என்னிடம் சொன்ன போது அது என்ன தல என்று அழைக்கிறீர்கள் என்று மோகனிடம் நான் கேட்டேன்.
அதற்கு அவர் இங்கெல்லாம் தலைவன் என்பதை தல என்றுதான் அழைப்போம் என்று கூறினார்.