மஞ்சிமா மோகனுடனான காதலை கௌதம் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்



மணிரத்னம் இயக்கிய கடல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக்



அப்படத்தை தொடர்ந்து என்னமோ ஏதோ, வை ராஜா வை, ரங்கூன் என பல படங்களில் நடித்து வந்தார்



அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மஞ்சிமா



அதனைத் தொடர்ந்து சத்ரியன், இப்படை வெல்லும், களத்தில் சந்திப்போம், என பல படங்களில் நடித்து வந்தார்



இவர்கள் இருவரும் 2019 ஆம் ஆண்டு வெளியான தேவராட்டம் படத்தில் நடித்திருந்தனர்



அப்போதே இந்த ஜோடி காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாகவும் தகவல் வெளியானது



ஆனால் இருவருமே இதனை உறுதிப்படுத்தவில்லை



அவ்வப்போது இணைந்து புகைப்படம் வெளியிடுவது, ஒன்றாக நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என வலம்வந்தனர்



இந்நிலையில் நடிகை மஞ்சிமா மோகனுடனான காதலை நடிகர் கௌதம் கார்த்திக் உறுதிப்படுத்தியுள்ளார்