வாழைப்பூவில் இவ்ளோ சுவையா சட்னி செய்ய முடியுமா? தேவையான பொருட்கள் : வாழைப்பூ 5 , 100 கிராம் சின்ன வெங்காயம், 2 ஸ்பூன் உளுந்து, 2 ஸ்பூன் கடலை பருப்பு 15 பல் பூண்டு, 1 நெல்லிக்காய் அளவு புளி, 1 ஸ்பூன் மல்லி, அரை ஸ்பூன் சீரகம், 2 ஸ்பூன் கடலை எண்ணெய், உப்பு வாழைப்பூவின் நாரை நீக்கி அதை வெட்டி தண்ணீரில் சேர்க்கவும் பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, வத்தல், மல்லி, சீரகம் சேர்த்து நன்றாக கிளர வேண்டும் நிறம் மாறும் வரை வதக்கி இதை தனியாக எடுத்து வைத்து கொள்ளவும் மேலும் எண்ணெய் சேர்த்து வாழைப்பூ சேர்த்து கிளரவும் பாதி வெந்ததும், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து கிளரவும் வதக்கிய பொருட்களுடன் உப்பு, புளி, தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்துகொள்ளவும் அவ்வளவுதான் சுவையான வாழைப்பூ சட்னி தயார்