ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு வழக்கத்தை விட அதிகளவு ஏறுவதும், குறைவுதுமே சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு நோய் ஆகும்.
சர்க்கரை வியாதி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சமீபகாலமாக கடுமையாக பாதித்து வருகிறது.
பழங்கள் ஆரோக்கியமானது என்றாலும் நீரிழவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சில பழங்களை தவிர்க்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் சர்க்கரை அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
மாம்பழத்தில் இயற்கையான சர்க்கரை உள்ளது. கடுமையான சர்க்கரை அளவை உயர்த்தும் என்பதால் மாம்பழத்தை தவிர்க்க வேண்டும்.
வைட்டமின்கள், ஆக்சிஜனேற்றிகள் இருந்தாலும் சீதாப்பழத்தை குறைவாக எடுத்துக்கொள்வது நல்லது ஆகும்.
வைட்டமின் சி, ஆன்டி ஆக்சிடன்கள் அதிகம் இருந்தாலும் இயற்கையாக சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்பதால் திராட்சையை தவிர்ப்பது நல்லது ஆகும்.
சர்க்கரை வியாதிால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைப்பழங்களை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். ரத்த சர்க்கரையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
உடலில் உள்ள குளுக்கோஸ் அளவை அதிகரிப்பதில் அன்னாசிப்பழம் முக்கிய பங்கு வகிக்கும். இது உயர் ரத்த சர்க்கரையை உண்டாக்கும்.
லிச்சி பழங்களை அதிகளவில் எடுத்துக்கொண்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து விடும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு பாதிப்பை உண்டாக்கும்.