மார்பக கேன்சர் நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்.. வராமலும் தடுக்கும் ஃபுட்ஸ்

Published by: குலசேகரன் முனிரத்தினம்

பசலைக்கீரை, பரட்டை, வெந்தயக் கீரை போன்ற கீரை வகைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபோலேட் அதிகம் உள்ளன. இவை உடலை வலுவாக வைத்திருக்கும்.

ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி ஆகியவற்றில் விட்டமின் சி, பைட்டோகெமிக்கல்கள் உள்ளன. இவை செல்களின் சேதத்தை குறைக்க உதவுகின்றன.

ஓட்ஸ் பிரவுன் ரைஸ் கோதுமை நார்ச்சத்து அதிகம் தரும். செரிமானம் மேம்படும்.

பருப்பு வகைகள், கடலை, முட்டை, மீன் ஆகியவை உடலுக்கு சக்தியை அளித்து திசுக்களை சரிசெய்ய உதவுகின்றன

உலர் பழங்களில் பாதாம் வால்நட்ஸில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன.

தக்காளி பழங்களில் உள்ள லைகோபீன் என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை குறைக்க உதவும் என்று கருதப்படுகிறது.

கேரட் மற்றும் பீட்ரூட்டில் பீட்டா கரோட்டின், இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. உடலை வலுப்படுத்தும்.

பச்சை தேயிலையில் உள்ள பாலீபீனால்கள் காரணமாக ஆக்ஸிஜனேற்ற நன்மைகள் கிடைக்கும்.

பூண்டு மற்றும் வெங்காயம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சேர்மங்களைக் கொண்டுள்ளன.

ஆப்பிள், தர்பூசணி, கொய்யா, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்கள் விட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகளை வழங்குகின்றன.