உலர்திராட்சையை ஊற வைத்த நீரில் நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்திற்கு மிகவும் பக்கபலமாக உள்ளது. மலச்சிக்கலைத் தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த தண்ணீரை குடிப்பதால் கல்லீரலில் உள்ள நச்சுக்கள் நீங்குகிறது. சிறுநீரகத்தை சுத்தம் செய்து ஆக்சிஜனேற்றியாக செயல்படுகிறது.
வைட்டமின் சி, பி - காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்கள் போன்றவை இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்கள், வைட்டமின் ஏ சரும பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால், தோல் பளபளக்கும்.
இதில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால் ஆரோக்கியமற்ற உணவுகள் மீது ஆர்வத்தை வரவிடாமல் தடுக்கும். இதனால், எடை இழப்பு ஏற்படும்.
இந்த தண்ணீர் இரும்புச்சத்தை அதிகரிக்கிறது. இதனால், ரத்தச்சோகை வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பொட்டாசியத்தையும், கெட்ட கொழுப்பை குறைக்கும் நார்ச்சத்தும் இருப்பதால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். இதனால், இதயம் ஆரோக்கியமாகும்.
இந்த தண்ணீரில் கால்சியம், போரான் நிறைந்துள்ளது. இது எலும்புகளை வலுவாக்குகிறது.
இந்த தண்ணீரில் உள்ள சேர்மங்கள் வாயில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடுவதால், வாய் சுகாதாரத்தை பாதுகாக்கிறது.