பூண்டின் மருத்துவப் பயன்கள் பற்றி இச்செய்தியில் பார்ப்போம்.



வெள்ளைப் பூண்டு சீன மருத்துவத்தில் முக்கிய மருந்துப் பொருள்.



இந்திய மருத்துவத்திலும் பூண்டுக்கு தனிச்சிறப்பான இடம் இருக்கிறது.



வெள்ளைப் பூண்டில் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது.



வெள்ளைப் பூண்டில் வோலடைல் ஆயில், கார்போஹைட்ரேட்ஸ்,



அரபிநோஸ், கேலக்டோஸ், வைட்டமின்கள், ஃபோலிக் அமிலங்கள், நயசின், ரைபோஃப்ளேவின், தயமின், அமினோ அமிலங்கள், என்சைம்கள் ஆகியன உள்ளன.



காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு வெள்ளைப் பூண்டு பல்லை மென்று உண்டு வாருங்கள். ஆனால் நீங்கள் ஹைபர்டென்சன் / பிபி மாத்திரைகளை நிறுத்த வேண்டாம்.



மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் மருத்துவரால் செய்யப்பட வேண்டியதாகும்.



உடல் சூட்டு பிரச்சனை உள்ளவர்கள் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டாம்.



அவர்கள் உணவில் பூண்டை சேர்த்துக் கொள்ளலாம்.