பிரதான உணவான அரிசியை தவிர்த்து தென்னிந்தியாவில் அதிகம் உட்கொள்ளபடும் சிறுதானியம் ராகி ஆகும் ராகி தமிழில் கேழ்வரகு என்று அழைக்கப்படுகிறது உடம்பிற்கு தேவையான சத்துக்கள் கேழ்வரகில் நிறைந்துள்ளன கேழ்வரகு, புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியம் ஆகும் கேழ்வரகில் நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால் இது எளிதாக செரித்து விடுமாம் குழந்தைகள் நல்ல உடல் மற்றும் மன வளர்ச்சி பெற கேழ்வரகை உட்கொள்ளலாம் புரதம், நார்ச்சத்து, மக்னிசியும் ஆகிய சத்துக்கள் உள்ளன வாரம் இருமுறை கேழ்வரகு உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்லது வீட்டில் கேழ்வரகில் கூழ் , கஞ்சி , அடை , லட்டு ஆகியவற்றை செய்து சாப்பிடலாம் மார்க்கெட்டில் கேழ்வரகு பிஸ்கட்டும் கிடைக்கிறது