சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார் நடிகை தமன்னா திருவனந்தபுரத்தில் லூலூ வணிக வளாகம் அமைந்துள்ளது அவர் இந்த வணிக வளாகத்திற்கு கடை திறப்பு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்றார் இதனால் அங்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர் ரசிகர்கள் தமன்னா உடன் செல்பி எடுத்தனர் ஏராளமானோர் அவருடன் செல்பி எடுக்க முயன்றதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது அப்போது அவர் கூட்டத்தில் சிக்கிக்கொண்டார் அப்போது ரசிகர்கள் சிலர் அவரிடம் அத்துமீற முயன்றதாக கூறப்படுகிறது இதனால் ஆத்திரமடைந்து அவர் கத்திய வீடியோ இணையத்தில் வைரல் இதனையடுத்து பவுன்சர்கள் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்