சுரேஷ் 1965 ஆம் ஆண்டு ஓடியில் நின்னு படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் எஃப்.ஐ.ஆர், நாரிமன், க்ரைம் ஃபைல் போன்ற படங்களில் போலீஸ் கேரக்டர்களில் நடித்து பிரபலமானவர் சுரேஷ் கோபி 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் சுரேஷ் கோபி ரசிகர்களால் மாஸ் ஆக்ஷன் படங்களின் மன்னன் என்றும் அழைக்கப்படுகிறார் கேரள ரசிகர்களைத் தவிர, தெலுங்கு ரசிகர்களிடையேயும் பிரபலமானவர் சுரேஷ் கோபி 'காளியாட்டம்' படத்தில் நடித்த இவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கொடுக்கப்பட்டது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார் சில தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பாலிவுட் படங்களிலும் தோன்றியுள்ளார் இன்று சுரேஷ் கோபியின் பிறந்தநாள் பிறந்தநாள் காணும் சுரேஷ் கோபிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்