இயக்குநர் ஷங்கரின் வெற்றி படங்களுள் ஒன்று எந்திரன் இந்திய திரையுலக வரலாற்றில் மாபெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் இது ரஜினி ரோபோவாகவும் மனிதனாகவும் கலக்கியிருந்தார் க்ராபிக்ஸ், திரைக்கதை என அனைத்துமே ரசிகர்களை மிரள வைத்தது ஏ ஆர் ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் 132 கோடி பட்ஜெட்டில் இப்படம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது பட்ஜெட்டைத் தாண்டி பல கோடி ரூபாய் வசூலை எட்டியது எந்திரன் இதன் இரண்டாம் பாகமாக 2.0 வெளியானது 2018-ல் வெளியான இப்படத்திலும் ரஜினியே ஹீரோவாக நடித்திருந்தார் எமி ஜாக்ஸன் முக்கிய ரோலில் வந்தார் 2.0 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை