சனிக்கிழமை மட்டும் ஆக்‌ஷன்.. நானி - எஸ் ஜே சூர்யா படம் எப்படி இருக்கு?

Published by: அனுஷ் ச

விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி நடத்து வெளிவந்துள்ள படம் சூர்யாஸ் சேட்டர்டே எனும் சரிபோதா சனிவாரம்

எஸ்.ஜே சூர்யா, பிரியங்கா மோகன், அதிதி பாலன் , அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

வாரத்தில் ஒரு நாள் மட்டுமே தனது கோபத்தை வெளிப்படுதும் நானி. அண்ணன் மீது உள்ள கோவத்தை பொது மக்கள் மேல் காட்டும் எஸ் ஜே சூர்யா. இந்த இரண்டு ஆண்களுக்கு இடையில் நடக்கும் சம்பவங்களை ஆக்ஷன் படமாக இயக்கியுள்ளார் விவேக் ஆத்ரேயா

அம்மா செண்டிமெண்ட், அக்கா செண்டிமெண்ட், மாஸான ஆக்‌ஷன் காட்சிகள் , காதல் , வில்லன் என முழு கமர்சியல் படமாக திரைக்கதை அமைந்துள்ளது

பிரியங்கா மோகனுக்கு படம் முழுவதும் வரும் முக்கியமான கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

எப்போதும் போல் எஸ் ஜே சூர்யா எத்தனை நடிகர்கள் வந்தாலும் தன்னுடைய பாணியில் ஸ்கோர் செய்துள்ளார்

படத்தில் பின்னணி இசை மற்றும் சண்டைக்காட்சிகள் பிரமாதமாக இருந்தது

சில இடங்களில் எடிட்டிங் இன்னும் கொஞ்சம் கண்டினியூட்டியோடு இருந்திருக்கலாம்

க்ளைமேக்ஸில் வரும் ஹீரோ - வில்லன் சந்தித்துக் கொள்ளும் காட்சிகள் படத்திற்கு வலு சேர்த்துள்ளது.

நானி நடித்து ஃபேமிலி எண்டர்டெயினர் படத்தை திரையரங்கில் பார்க்கலாம்