ஈரக்குலையை நடுங்க வைக்கும் ஹாலிவுட் பேய் படம்.. ஆடிட்டி எப்படி இருக்கு?

Published by: அனுஷ் ச

கடந்த ஜூலை மாதம் டாமியன் மெக்கார்த்தி இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் ஆடிட்டி

சமீபத்தில் ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள இப்படம் இந்த ஆண்டின் சிறந்த ஹாரர் திரைப்படமாக பாராட்டுக்களைப் பெற்று வருகிறது

டானி மற்றும் டார்ஸி இருவரும் இரட்டை சகோதரிகள். டானி சிலரால் கொல்லப்படுகிறாள். டார்ஸியால் எதார்த்தத்திற்கு அப்பால் சென்று சில விஷயங்களை பார்க்க முடியும். அந்த சக்தியை வைத்து தனது தங்கையை கொன்ற உண்மையான குற்றவாளிகளை டார்ஸி பழிவாங்குவதே படத்தின் மீதிக்கதை.

ஆடிட்டி வெறும் ஹாரர் படம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. கிரைம் த்ரில்லர் , ரிவெஞ்ச் த்ரில்லர் என வெவ்வேறு ஜானர்களில் பயணிக்கக் கூடியதாக திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது

மர்மமான வீடு, மர்மமான கதாபாத்திரங்கள் படத்தின் பிளஸாக அமைந்தது

லாஜிக்கோடு படம் பார்பவர்களுக்கு சில இடங்களில் ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம்

படத்தின் ஒவ்வொரு காட்சியும் நம்மை டென்ஷனாகவே வைத்திருக்கும் என்று கூட கூறலாம்

படத்தின் இசை பயத்தை ஏற்படுத்தும் அளவிற்கு சிறப்பாக இருந்தது

திகில் படத்தை விரும்பி பார்பவர்கள் கட்டாயம் இப்படத்தை பார்க்கலாம்