தங்க நிற உடையில் மினுமினுக்கும் ஜான்வி கபூர்! தயாரிப்பாளர் போனி கபூர் - மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் அனந்த் - ராதிகா திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் தடக் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் ஜான்வி கபூர் குஞ்ஜன் சாக்சேனா, ருஹி, குட் லக் ஜெரி, ராக்கி ஆர் ராணி கீ ப்ரேம் கஹானி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் ஜூனியர் என்.டி.ஆரின் முதல் பாகத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகவுள்ளார் சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார் மாடலிங் துறையிலும் மாஸ் காட்டி வருகிறார் அனந்த்-ராதிகா திருமண வைபோகத்தில் தங்க நிற உடை அணிந்து தங்க சிலை போல் காட்சியளித்தார் ஆடையில் தொடங்கி ஆபரணம் வரை, தொட்டது எல்லாம் பொன்னிறத்தில் காணப்படும் லுக்கை தேர்வு செய்து கவனத்தை ஈர்த்துள்ளார்