முள்ளங்கி சாம்பார் தானே பிரபலம். அதென்ன முள்ளங்கி ஜூஸ்.



பொதுவாகவே முள்ளங்கி ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.



அதோடு மட்டுமல்லாமல் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ரத்த நாளங்களை வலுப்படுத்தும்.



இது எதிர்ப்புசத்தை அதிகரித்து சளி, காய்ச்சல், இருமல் போன்ற பிரச்னைகளை ஏற்படாமல் கட்டுப்படுத்துகிறது.



முள்ளங்கியில் ஆந்தோசயனின்ஸ், ஃபாலிக் ஆசிட், ஃபாளாவினாய்ட்ஸ் ஆகியவை உள்ளன.



இதில் ஆந்தோசயனின்ஸ் இதயத்தில் எந்த குறைபாடும் ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது.



முள்ளங்கியில் இருக்கும் கொலாஜன் ரத்த நாளங்களை வலுப்படுத்துகிறது.



முள்ளங்கி சிறியது 6 , கேரட் சிறியது 3, ஒரு பெரிய சைஸ் ஆப்பிள்,2 செலரி தண்டுகள்,ஒரு ஆரஞ்சு பழம்,ஒரு எலுமிச்சை,அரை இன்ச் இஞ்சி,அரை இன்ச் மஞ்சள்
கால் கப் (60 மில்லி) தண்ணீர்



இவற்றை அரைத்து , எல்லாவற்றையும் பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும்.



இப்போது சுவையான முள்ளங்கி ஜூஸ் தயார்.