தினமும் உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமுடன் வாழ உதவும். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்பளர் தண்ணீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும். வெதுவெதுப்பான் நீரை குடிப்பதால் செரிமானம் தூண்டப்படும். உடல் சுறுசுறுப்பாக இருக்கும். இரத்த ஓட்டம் சீராகும். ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் நீங்கும். காலையில் மட்டும் தண்ணீர் குடிப்பது போதாது. ஒரு நாளைக்கு தேவையான தண்ணீரை குடிப்பதும் அவசியம். உடலில் சரியான அளவு நீர்ச்சத்து இருப்பதை உறுதி செய்யும். தினமும் 8 டம்பளர் தண்ணீர் குடிப்பது அவசியம். குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதால் உடல் சோர்வு முதல் சிறுநீரகம் பாதிக்கப்படுவது உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்படும்..