டேனியல் 1989ஆம் ஆண்டு லண்டனில் பிறந்தார் இவரின் முதல் படம் த டெய்லர் ஆஃப் பனாமா ஹாரி பாட்டர் படத்தில் நடித்த போது இவரது வயது 11 ஹாலிவுட்டின் மிக இளம் வயதில் நடிக்க வந்தவர்களுள் இவரும் ஒருவர் ஹாரி பாட்டர் முதல் படத்தில் நடித்ததற்காக இவருக்கு ஒரு மில்லியன் டாலர்கள் சம்பளமாக வழங்கப்பட்டது இவர் ஹீரோவாக மட்டுமன்றி வில்லனாகவும் சில படங்களில் நடித்துள்ளார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் என்றால் இவருக்கு மிகவும் பிடிக்குமாம்! நடிகர் ரூபர்ட் கிரின்ட்டும் இவரும் நெருங்கிய நண்பர்கள்.. இவர் ஹாரி பாட்டர் படங்களில் 10 ஆண்டுகள் தொடர்ந்து நடித்துள்ளார் இவருக்கு பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் சச்சினின் டெண்டுல்கர்!