அரையிறுதி முனைப்பில் இந்திய அணி சோதிக்குமா ஆஸ்திரேலிய அணி 51வது போட்டியில் இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் சூப்பர் 8ல் மோத இருக்கின்றன இதுவரை தொடர்ந்து வெற்றி பெற்று வரும் இந்திய அணி, இந்த போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய விரும்புகிறது ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்த பின்னர் வரும் ஆஸ்திரேலிய அணி, இந்த போட்டியில் எப்படியும் வெற்றிபெற விரும்புகிறது சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இதுவரை 31 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன இதில், அதிகபட்சமாக இந்திய அணி 19 போட்டிகளிலும், ஆஸ்திரேலிய அணி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது டி20 உலகக் கோப்பையில் இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் நடந்துள்ளன அதில், இந்திய அணி 3 போட்டிகளிலும், ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன சூப்பர்-8 சுற்றில் இரு அணிகளும் மோதும் கடைசிப் போட்டி இதுவாகும் இந்திய அணி, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை வீழ்த்தி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமென்றால் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும்