கேப்டன் பதவியை ராஜினாமா செய்த வில்லியம்சன்! 10 ஆண்டுகளுக்கும் மேலாக, நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் ஒரு முக்கிய நபராக இருந்து வருகிறார் வில்லியம்சன் பல ஆண்டுகளாக தனது அணியின் வெற்றிக்கு பெரும் பங்களித்து வருகிறார் அவர் விளையாடிய பத்து உலகக் கோப்பைகளில் ஏழு முறை நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது 2011 முதல் ஒருநாள் மற்றும் டி20 ஆகிய இரண்டு விதமான போட்டிகளிலும் வில்லியம்சன் தொடர்ந்து விளையாடி வருகிறார் தோனிக்கு பிறகு வில்லியம்சன்னிற்கு இந்தியாவிலும் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது நடப்பு டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணி வெளியேறிய நிலையில், வில்லியம்சன் கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார் கிரிக்கெட் வாரியத்துடனான மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ளார் மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடுவார் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஆகிய போட்டிகளிலும் வில்லியம்சன் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது