ஆந்திர மாநிலம் ரெகாடா கிராமத்தை சேர்ந்தவர் சாய் தேஜா பனிமூட்டம் காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சாய் தேஜா உயிரிழந்துள்ளார் சாய் தேஜா, 2013-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் இணைந்தார் 27 வயதான சாய் தேஜாவுக்கு சர்மிளா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். அவரது சகோதரர் மகேஷும் ராணுவத்தில் ஜவானாக வேலை செய்கிறார் சாய் தேஜா ஏழு மாதங்களுக்கு முன்பு ஜெனரல் பிபின் ராவத்தின் எஸ்பிஓவாக மாற்றப்பட்டார் இறுதியாக புதன்கிழமை காலை அவரது மனைவி மற்றும் குழந்தைகளிடம் வீடியோ காலில் பேசியுள்ளார் சாய் தேஜா கடைசியாக விநாயக சதுர்த்தி போது தனது வீட்டிற்கு வருகை தந்தார்