ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.



கடந்த 2002 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு இணைந்து குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை உருவாக்கியது.



சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகளின் படி 5 முதல் 17 வயது
வரையிலான சுமார் 160 மில்லியன் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாக உள்ளனர்


2022 ஆம் ஆண்டு குழந்தைத் தொழிலாளர் முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான
உலகளாவிய சமூகப் பாதுகாப்பு என்ற அடிப்படையில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.


வறுமை, கல்வி அறிவின்மை, குழந்தை கடத்தல் போன்றவற்றால்
குழந்தை தொழிலாளர்கள் உருவாவதாக கூறப்படுகிறது.


2025 ஆண்டுக்குள் குழந்தை தொழிலாளர்களை முற்றாக ஒழித்துவிட இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது



கொரோனா தொற்றுக்குப் பின் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை
பல மடங்கு அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன


குழந்தை தொழிலாளர் பிரச்சனைக்கு அரசு மட்டுமல்ல நாமும்
சமூகமாக ஒன்றிணைந்து தீர்வு கண்டால் மட்டுமே முடிவு கிடைக்கும்


தீண்டாமை, குழந்தைத் தொழிலாளர் முறை, கொத்தடிமை முறை போன்ற
இன்னல்களில் அதிக அளவில் பாதிக்கக்கூடியவர்கள் குழந்தைகள்தான்.


குழந்தை தொழிலாளர் முறையை விரைந்து ஒழிக்க இந்நாளில் நாம் உறுதியேற்போம்...!