ஆங்கிலேயர் ஆட்சியில் மேலை நாடுகளில் இருந்து மலை கிராமங்கள், அடிவாரங்களுக்கு வந்த காய்! தெற்கு மெக்சிகோவை பூர்வீகமாகக் கொண்டது. சயோடே ஸ்குவாஷ் என அழைக்கப்படுகிறது. சமையலில் ருசியாக இருப்பதோடு பல வியாதிகளை எதிர்த்து போராடவும் செய்கிறது அடிக்கடி உண்டால் தசைகளை வலுவாக்கி நரம்பு தளர்ச்சி பாதிப்புகளை சரி செய்யும் அதிகமாக நீர் சத்தும் குறைந்த கலோரிகளும் கொண்ட காய், எடையைக் குறைக்க உதவும் வைட்டமின் சி, பாஸ்பரஸ், மெக்னீசியம் சத்துகளை அதிகம் கொண்டது கர்ப்பிணிப் பெண்களின் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க சௌ சௌ சாறு உதவுவதாக கூறப்படுகிறது சிறுநீரகத்தில் இருந்து கூடுதல் திரவத்தை அகற்றி கற்கள் உருவாவதை தடுக்கிறது சௌ சௌ அதிகம் உண்பது சரும ஆரோக்கியத்துக்கும் உதவும் குடல், மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்