கிரீன் டீ செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. இதில் ஆன்டி- ஆக்ஸிடண்ட் அதிகமாக இருக்கிறது. மூளையின் செயல்பாட்டை தூண்டுகிறது.. கிரீன் டீ உடன் சர்க்கை சேர்காமல் சாப்பிடுவது நல்லது, காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிப்பது நல்லதல்ல.. வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிப்பதால் வயிறு கோளாறுகள் ஏற்படும் அபாயாம் இருக்கிறது. அதிக அளவில் கிரீன் டீ குடிப்பது ரத்த சோகைக்கு வழிவகுக்கும் என்றும் சொல்லப்படுகிறது. எதுவும் அளவோடு இருப்பதே சிறந்தது. தூங்க செல்வதற்கு 5 மணி நேரத்திற்கு முன்பு குடித்தால் சிறப்பாகும். இல்லையெனில் தூக்கம் பாதிக்கப்படும். கிரீன் டீ உடலுக்கு நல்லதுதான். ஆனால், இது மட்டுமே உடல் ஆரோக்கியத்திற்கு முழு காரணமல்ல.