பல பெண்களும் தங்கள் சகோதரிகள் மற்றும் நண்பர்களுடன் தங்கள் பொருட்களை பகிர்ந்து கொள்வார்கள் அதில் உடைகள், செருப்பு, அழகு சாதனப் பொருட்களும் அடங்கும் அழகு சாதனப் பொருட்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வது நல்லதல்ல இந்த அழகுசாதனப் பொருட்களை மட்டும் யாரோடும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்..! சீப்புகள் மற்றும் ஹேர் ப்ரஸ்கள் பகிர்ந்து கொள்வதால் பொடுகு மற்றும் முடி உதிர்வு ஏற்படலாம் ஜாரில் இருக்கும் மாய்ஸ்சுரைஸர், ஃபேஸ் மாஸ்க் போன்றவற்றை பகிர்ந்து கொள்ள கூடாது பௌடர் வடிவில் இருக்கும் காம்பேக்ட் பௌடர், செட்டிங் பௌடர், பௌடர் ப்ளஷ் போன்றவற்றை பகிர்ந்து கொள்வதை தவிர்த்திடுங்கள் ஷ் முகத்தை விட கண்கள் சென்ஸிடிவ் ஆனது; அதனால் ஐ மேக்-அப் பொருட்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம் லிப்ஸ்டிக், லிப் பாம் போன்ற பொருட்களை ஷேர் செய்வதால் கிருமிகள் தொற்றி கொள்ளலாம் மேக்-அப் பிரஸ்களை பகிர்ந்து கொள்வதால் எண்ணெய், கிருமிகள் போன்றவை தொற்றலாம்