பைக் எனப்படும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களிடம் ஏன் சுங்க வரி வசூலிக்கப்படுவதில்லை?

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: pexels

இரு சக்கர வாகனம் சிறியது மற்றும் குறைந்த இடத்தை எடுத்துக் கொள்ளும் வாகனம் என கருதப்படுகிறது.

Image Source: pexels

நான்கு சக்கர வாகனங்களை விட மோட்டார் சைக்கிள்கள் சாலைக்கு மிகக் குறைந்த சேதத்தை ஏற்படுத்துகின்றன.

Image Source: pexels

இருசக்கர வாகனம் வாங்கும்போதே சாலை வரி மொத்தமாக வசூலிக்கப்படுகிறது.

Image Source: pexels

இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் இந்திய தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள் 2008 இன் கீழ் இரு சக்கர வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

Image Source: pti

அதனால் இருசக்கர வாகன பகுதியில், டோல் பிளாஸாக்களில் கூட்டம் குறைவாக இருக்கும்.

Image Source: pexels

நடுத்தர வர்க்கத்தினருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இது இலவசமாக வைக்கப்பட்டுள்ளது.

Image Source: pexels

இரு சக்கர வாகனங்களில் ஃபாஸ்டேக் பொருத்துவதும், அதை ஸ்கேன் செய்வதும் தொழில்நுட்ப ரீதியாக சற்று கடினமானது.

Image Source: pti

இரு சக்கர வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் மிகவும் குறைவாக இருப்பதால், அதை வசூலிப்பதற்கான செலவு அதை விட அதிகமாகிவிடுகிறது.

Image Source: pexels

அரசாங்கம் எதிர்காலத்திலும், இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகள் இருக்காது என தெளிவுபடுத்தியுள்ளது.

Image Source: pexels