மின்சார வாகனங்கள் மீது மானியம் எப்படி கிடைக்கும்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: pixabay

அங்கீகரிக்கப்பட்ட மற்றும் FAME-II/PM E-DRIVE அல்லது மாநிலக் கொள்கையின் கீழ் சான்றளிக்கப்பட்ட EV மாடல்களுக்கு மட்டுமே மானியம் கிடைக்கும்.

Image Source: pixabay

மின்சார இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான மானியத்தை மத்திய அரசு ஒரு கிலோவாட் மணி நேரத்திற்கு வழங்குகிறது. இது ஸ்கூட்டர்களுக்கு 5000 முதல் 10000 வரை இருக்கும்.

Image Source: pixabay

டெல்லி, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் தங்களது மின்சார வாகனக் கொள்கையின் கீழ் மானியம் வழங்குகின்றன. உதாரணமாக, தில்லியில் மின்சார கார்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரையிலும், இரு சக்கர வாகனங்களுக்கு 30,000 ரூபாய் வரையிலும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Image Source: pixabay

3-சக்கர வண்டிக்கான மானியம் பெற, வண்டியின் எக்ஸ்-ஷோரூம் விலை 2.5 லட்சம் வரை என ஒரு குறிப்பிட்ட வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Image Source: pixabay

இப்போது மாநிலங்களில் உள்ள டீலர்கள் நேரடியாக விலைப்பட்டியலில் மானியத் தொகையைக் குறைத்து விடுகிறார்கள்.

Image Source: pixabay

டீலர்ஷிப்-ல் ஆதார் கார்டு மூலம் சரிபார்த்தல் e-KYC செய்து, மானியம் கோர உதவும் e-வவுச்சர் உருவாக்கப்படுகிறது.

Image Source: pixabay

மானியத்திற்கு வாகனமானது CMVR 1989 இன் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் மற்றும் மாநில போக்குவரத்துத் துறையில் பதிவு செய்யப்பட வேண்டும்.

Image Source: pixabay

மானியத்தை கோர ஆதார் அட்டை முகவரி வங்கி கணக்கு மற்றும் வாகன ரசீது அவசியம்

Image Source: pixabay

டீலர் நேரடியாக தள்ளுபடி வழங்கவில்லை என்றால், upevsubsidy.in போன்ற மாநில மின்சார வாகன போர்ட்டலில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Image Source: pixabay