‘ஃப்ளெக்ஸ் ஃப்யூயல்’ பைக் என்றால் என்ன? இதனால் கிடைக்கும் நன்மைகள்?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: pinterest

ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் பைக் என்பது ஒரே எரிபொருள் தொட்டியில் பெட்ரோல் எத்தனால் பல்வேறு கலவைகளுடன் இயக்கக்கூடிய வகையில் சிறப்பு தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட வாகனம்.

Image Source: pinterest

சாதாரண பைக்குகள் நூறு சதவீத பெட்ரோல் அல்லது மிகக் குறைந்த சதவீத எத்தனால் கலந்த எரிபொருளுடன் மட்டுமே இயங்கும்.

Image Source: pinterest

ஆனால் ஃப்ளெக்ஸ்-ஃப்யூயல் பைக்குகள் E20 முதல் E85 வரை அதாவது 85 எத்தனால் 15 பெட்ரோல் வரை எந்த கலப்பு எரிபொருளையும் திறம்பட பயன்படுத்த முடியும்.

Image Source: pinterest

ஃப்ளெக்ஸ்ஃப்யூயல் பைக்குகளில் உள்ள ஒரு சிறப்பு எரிபொருள் கலவை சென்சார் டேங்கில் எவ்வளவு சதவீதம் எத்தனால் உள்ளது என்பதை தொடர்ந்து கண்டறிகிறது.

Image Source: pinterest

அந்த தரவுகளின் அடிப்படையில் இன்ஜினில் உள்ள தானியங்கி ECU எரிபொருள் உட்செலுத்தப்படும் அளவையும் ஸ்பார்க் நேரத்தையும் தானாகவே மாற்றியமைக்கும்.

Image Source: pinterest

இந்திய சந்தையில் ஏற்கனவே ஹீரோ மோட்டோகார்ப் அதன் பிரபலமான மாடல்களான ஸ்பிளெண்டர் பிளஸ் ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் HF டீலக்ஸ் ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் ஆகியவற்றை வெளியிட்டுள்ளது

Image Source: pinterest

ஹோண்டா நிறுவனம் CB300F ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் போன்ற மாடல்களை எத்தனால் எரிபொருள் திறனுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.

Image Source: pinterest

ஃப்ளெக்ஸ்ஃப்யூயல் பைக்குகளால் எரிபொருள் செலவுகள் கணிசமாகக் குறையும்.

Image Source: pinterest

ஃப்ளெக்ஸ்ஃப்யூயல் பைக்குகள் காரணமாக மாசுப்பாடு பெருமளவு குறையும்.

Image Source: pinterest