கவாசாகி நிஞ்ஜா 300 பைக்கோட சக்தி என்னன்னு தெரியுமா.?

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

காவாசாகி மோட்டார் சைக்கிள்கள் அவற்றின் சக்திவாய்ந்த செயல்பாட்டிற்காக அறியப்படுகின்றன.

காவாசாகி நிஞ்ஜா 300 ஒரு சிறந்த பைக்காகவும் இந்திய சந்தையில் உள்ளது.

கவாசாகி நிஞ்ஜா 300-ல் திரவ-குளிரூட்டப்பட்ட, 4-ஸ்ட்ரோக், இணை-இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

கவாசாகி பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் இந்த என்ஜின், 11,000 rpm-ல் 29 kW பவரை உற்பத்தி செய்கிறது.

நிஞ்சா 300-ன் எஞ்சின் 10000 rpm-ல் 261 Nm டார்க்கை உருவாக்குகிறது.

இந்த மோட்டார் சைக்கிளில் ரிட்டர்ன் ஷிப்ட் உடன் கூடிய 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த பைக் எலக்ட்ரிக் ஸ்டார்ட் மற்றும் டிஜிட்டல் இக்னிஷன் சிஸ்டத்துடன் வருகிறது.

இந்த பைக், லைம் கிரீன், கேண்டி லைம் கிரீன் மற்றும் மெட்டாலிக் மூன்டஸ்ட் கிரே ஆகிய மூன்று வண்ணங்களில் சந்தையில் கிடைக்கிறது.

இந்தியாவில் கவாசாகி நின்ஜா 300-ன் எக்ஸ் ஷோரூம் விலை 3.17 லட்சம் ரூபாய் ஆகும்.