10 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் சன்ரூஃப் கார்கள்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

இந்தியாவில் பட்ஜெட்டில் நல்ல அம்சங்கள் கொண்ட கார்கள் எல்லோரின் தேர்வாக இருக்கின்றன.

ஆனால், சில அம்சங்களுக்காக லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டியிருந்தது

இப்போது நம் பட்ஜெட்டிலேயே சன்ரூஃப் போன்ற அற்புதமான அம்சங்கள் கொண்ட கார்களை வாங்கலாம்

10 லட்சம் ரூபாயில் பிரீமியம் அனுபவத்தை வழங்கும் கார்கள் உள்ளன

ஹூண்டாய் பிரீமியம் ஹேட்ச்பேக் ஐ20யின் மேக்னா வேரியன்ட் எலெக்ட்ரிக் சன்ரூஃப் ஆப்ஷனை வழங்குகிறது

மேக்னா வேரியன்ட் எக்ஸ் ஷோரூம் விலை சுமார் 7 லட்சம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது

டாடா பன்ச் மற்றும் ஆல்ட்ரோஸ் மாடல்களில் சன்ரூஃப் அம்சங்கள் உள்ளன

டாடா பன்ச் பியூர்+ எஸ் வேரியன்ட் வாய்ஸ் அசிஸ்டட் சன்ரூஃப் வழங்குகிறது

டாடா பன்ச் பியூர் எஸ் வேரியன்ட் விலை சுமார் 7.40 லட்சம் ஆகும்.

ஹூண்டாய் எக்ஸ்டரில் குரல் மூலம் இயக்கப்படும் எலெக்ட்ரிக் சன்ரூஃப் உள்ளது

ஹூண்டாய் எக்ஸ்டெர்ரா சுமார் 8 லட்சம் ரூபாய் ஆரம்ப விலையில் கிடைக்கிறது