மெர்சிடிஸ் AMG GT மற்றும் GT ப்ரோ அறிமுகம் - V8 திறன் கொண்ட அட்டகாசமான ஸ்போர்ட்ஸ் கார்

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: Somnath Chatterjee

மெர்சிடிஸ் ஏஎம்ஜி மிகப்பெரிய ஏஎம்ஜி போர்ட்ஃபோலியோவை கொண்டுள்ளது. அதன் சமீபத்திய சூப்பர் காரான ஏஎம்ஜி ஜிடி புரோ வடிவத்திலும் வந்துள்ளது. ஏஎம்ஜி ஜிடி மற்றும் ஜிடி புரோ ஆகியவை 4.0 லிட்டர் இரட்டை-டர்போவை கொண்டுள்ளன. ஜிடி63 மாடல் 583bhp மற்றும் ஜிடி63 புரோ மாடல் 612hp திறனை வழங்கும்.

Image Source: Somnath Chatterjee

சாதாரண மாடல் 9-வேக இரட்டை கிளட்ச் டிரான்ஸ்மிஷன் மற்றும் அனைத்து சக்கரமும் இயங்கும் அமைப்புடன் வருகிறது. இந்த சூப்பர் கார், 3.2 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டும். அதே நேரத்தில் இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 317 கிமீ ஆகும்.

Image Source: Somnath Chatterjee

புதிய ஜிடி பெரியதாக உள்ளது மற்றும் 2 பிளஸ் 2 அமைப்பில் அதிக இடவசதி கொண்டுள்ளது. இது 11.9 அங்குல தகவல் தொடர்பு தொடுதிரை மற்றும் 12.3 அங்குல டிஜிட்டல் ஓட்டுனர் காட்சித்திரையை கொண்டது.

Image Source: Somnath Chatterjee

வசதிகளை பொறுத்தவரை, பர்மேஸ்டர் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் மற்றும் இரட்டை மண்டல காலநிலை கட்டுப்பாடு மற்றும் பலவற்றை உள்ளடக்கியது.

Image Source: Somnath Chattrejee

ப்ரோ பதிப்பு டிராக்கை மிகவும் மையப்படுத்திய மாடலாகும். இது கடினமானது மற்றும் வேகமானது.

Image Source: Somnath Chatterjee

GT63-ன் விலை 3 கோடி ரூபாயில் தொடங்குகிறது. GT63 Pro-ன் விலை 3.6 கோடி ரூபாய் ஆகும்.

Image Source: Somnath Chatterjee