மஹிந்திராவின் BE 6e மற்றும் XEV 9e கார் - சிறப்பம்சங்கள் என்ன?

Published by: ஜான்சி ராணி

மஹிந்திராவின் BE 6e மற்றும் XEV 9e கார்

இரண்டு EVகளும் 16 ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் ஆடியோ சிஸ்டத்துடன் Dolby Atmos உடன் வருகின்றன. அதே நேரத்தில் A.R ரஹ்மான் உருவாக்கிய சோனிக் ட்யூன்களுடன் ப்ரீசெட் தீம்களும் உள்ளன.

ஸ்க்ரீன்

XEV 9e கார் மாடலில் அதிக ஸ்க்ரீன் இருக்கிறது. பயணிகளின் பொழுதுபோக்குக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் பொதுவாக உயர்நிலை சொகுசு காரில் மட்டுமே காணப்படுகிறது.

வீடியோ கால் வசதிக்காக கேமரா..

காரில் ஒரு செல்ஃபி கேமரா உள்ளது. இது நீங்கள் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள உதவுவதோடு,  டிரைவரையும் கண்காணிக்க உதவும்.

பல கார்கள் 360 டிகிரி கேமராவைக் கொண்டிருந்தாலும், இந்த இரண்டு EVகளும் ஆட்டோபார்க் செயல்பாட்டுடன் வருகின்றன.

Remote Control Parking வசதி கொண்டது.

ஆக்மென்டட் ரியாலிட்டி HUD ஆகும்.

இது பிரைட்னஸ் மற்றும் அளவு ஆகியவற்றை கஸ்டமைஸ் செய்ய முடியும்.

என்ன சிறப்பு?

infinity roof உடன் அதை customisable ஆம்பியண்ட் லைட்டிங். இது க்ளாஸ் ரூஃப் கூட விரிவாக்கம் செய்து கொள்ளலாம்.

இருக்கை

இடம் வசதி கொண்ட இருக்கைகளை கொண்டுள்ளது.

மஹிந்திராவின் BE 6e கார் மாடலின் தொடக்க விலை, ரூ.18.90 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

682km வரையிலான ARAI- சான்றளிக்கப்பட்ட ரேஞ்ச், அதிகபட்ச ஆற்றல் 281hp மற்றும் பூஜ்ஜியத்திலிருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 6.7 வினாடிகளில் எட்டும்

மஹிந்திராவின் XEV 9e கார் மாடலின் விலை ரூ.21.90 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

MIDC சுழற்சியில், பெரிய 79kWh அலகு கொண்ட XEV 9e ஒருமுறை சார்ஜ் செய்தால் 656km செல்லும் என்று கூறப்படுகிறது. மஹிந்திரா 6.7 வினாடிகளில் 0-100kph வேகத்தை எட்டும்.