ரூ.100 பெட்ரோலா.. ரூ.10 சார்ஜிங்கா? - உங்க பட்ஜெட்டுக்கு எந்த வண்டி பெஸ்ட்?

Published by: ராஜேஷ். எஸ்

உதாரணம்

தினசரி பயணம்: 40 கி.மீ

மாதாந்திர பயணம்: 1,000 கி.மீ என வைத்துக்கொள்வோம்.

பெட்ரோல் பைக் மைலேஜ்

ஒரு பைக் சராசரியாக ஒரு லிட்டருக்கு 55 கி.மீ தரும் என வைத்துக்கொள்வோம்.

மாதத்திற்கு எவ்வளவு பெட்ரோல்?

1,000 கி.மீ செல்ல சுமார் 18 லிட்டர் பெட்ரோல் தேவை.

பெட்ரோல் செலவு

1 லிட்டர் 103 ரூபாய் என்றால், மாத செலவு 1,850 – 1,900 ரூபாய் ஆகும்.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரேஞ்ச், சிங்கிள் சார்ஜில் 100 கி.மீ செல்லும் என வைத்துக்கொள்வோம்.

எத்தனை சார்ஜ் தேவை?

1,000 கி.மீ பயணத்திற்கு சுமார் 10 Full Charge தேவை.

சார்ஜிங் செலவு

மாத மின்சார செலவு வெறும் 250 – 350 ரூபாய் தான் ஆகும்.

மாத சேமிப்பு

EV பயன்படுத்தினால் 1,500 – 1,700 ரூபாய் வரை சேமிக்கலாம்

வருட சேமிப்பு

ஒரு ஆண்டில் கிட்டத்தட்ட 18,000 – 20,000 ரூபாய் சேமிப்பு கிடைக்கும்

பேட்டரி பற்றி கவலை வேண்டாம்

பெரும்பாலான EV-களுக்கு 3–5 வருட வாரண்டி கிடைக்கும்.

எது பெஸ்ட்?

நகர பயணத்திற்கு EV சிறந்தது. நீண்ட தூர பயணத்திற்கு அதிக சார்ஜிங் வசதி இல்ல என்பதால் பெட்ரோல் சிறந்தது.