விநாயகர் சதுர்த்தி : பூஜை செய்ய உகந்த நேரம் எது?

Published by: பிரியதர்ஷினி

இந்துக்களின் பண்டிகைளில் மிக மிக முக்கியமான பண்டிகையாக கருதப்படுவது விநாயகர் சதர்த்தி

முழு முதற்கடவுளாக போற்றப்படும் விநாயகர் அவதரித்த நாளே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படடு வருகிறது

இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இதற்கு விநாயகர் சதுர்த்தி, கணேச சதுர்த்தி என்று பல பெயர்களும் உண்டு

ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியிலே விநாயகப் பெருமான் அவதரித்தாக புராணங்கள் கூறுகிறது. இதன் காரணமாகவே ஆவணி மாதம் என்றாலே அது விநாயகருக்கு உரிய மாதமாக கருதப்படுகிறது

நடப்பாண்டிற்கான விநாயகர் சதுர்த்தி வரும் செப்டம்பர் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தில் 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி வருகிறது

துர்த்தி திதி வரும் செப்டம்பர் மாதம் 6ம் தேதி மதியம் 1.48 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் மதியம் 3.38 மணி வரை வருகிறது

செப்டம்பர் 7ம் தேதி வரும் விநாயகர் சதர்த்தி நன்னாளில் காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை ராகு காலமும், மதியம் 1.30 மணி முதல் மதியம் 3 மணி வரை எமகண்டமும் வருகிறது

இதனால், இந்த நேரம் தவிர்த்து மதியம் 1 மணிக்கு முன்னதாக எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டை செய்யலாம்