ஆடி கிருத்திகை முக்கியமான விழா ஆகும். முருகப் பெருமானுக்குரிய முக்கிய விசேஷ மற்றும் விரத நாட்களில் ஆடிக் கிருத்திகையும் ஒன்று இந்த ஆண்டு ஆடிக் கிருத்திகையானது ஜூலை 30ம் தேதி செவ்வாய்கிழமை வருகிறது இந்த ஆண்டு ஜூலை 29, 30 ஆகிய இரு நாட்களுமே கிருத்திகை நட்சத்திரம் உள்ளதால் எந்த நாளில் விரதம் கடைபிடிக்கலாம் ஜூலை 29ம் தேதி பகல் 02.41 மணிக்கு துவங்கி, ஜூலை 30ம் தேதி பகல் 01.40 மணி வரை கிருத்திகை நட்சத்திரம் உள்ளது குழந்தை இல்லாத தம்பதிகள் இந்த நாளில் விரதம் இருந்து, முறையாக வழிபட்டால் நிச்சயம் குழந்தை வரம் கிடைக்குமாம் திருமணம் வரம் வேண்டுபவர்கள் ஆடிக்கிருத்திகை அன்று முருகப் பெருமானையும், அம்பாளையும் வழிபடலாம் ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்தின் தீய விளைவுகளை குறைக்குமாம் முருகப் பெருமானின் அருளை பெறுவதற்கும், அனைத்து விதமான நலன்களையும் பெறுவதற்குரிய நாளாக ஆடிக்கிருத்திகை கருதப்படுகிறது