ஆங்கிலத்தில் chamomile என்றழைக்கப்படும் சீமை சாமந்தி பூவில் ஆரோக்கியம் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், போட்டாசீயம், வைட்டமின் ஏ உள்ளிட்ட பல சத்துக்கள் இருக்கிறது. கெமொமைல் டீ ஆக பருகலாம். கொதித்த நீரில் சீமை சாமந்தி பூக்களைப் போட்டு, வடிக்கட்டி அதன் சாற்றைக் குடிக்கலாம். சீமை சாமந்தி சரும ஆரோக்கியத்திற்கும் நல்லது. மனம் ரிலாக்ஸ் ஆக இருப்பதற்கும், குடல் சார்ந்த தொந்தரவுகள் ஏற்படாமல் இருக்கவும் சீமை சாமந்தியில் தயாரிகக்பப்ட்ட டீ உதவும். தூங்க செல்வதற்கு முன், சீமை சாமந்தி டீ குடித்தால் தூக்கமின்மை பிரச்சனைகள் நீங்கும். சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு, கெமோமைல் டீ பருகினால், அஜீரண கோளாறு ஏற்படாமல் தடுக்கலாம். சீமை சாமந்தி பூக்களை பேஸ் பேக்குகளுக்கும் பயன்படுத்தலாம். சீமை சாமந்தை பூக்களை சேகரித்து நிழலில் உலர்த்தி காற்று புகாத டப்பாவில் சேமித்து வைத்துகொள்ளலாம். சீமை சாமந்தியை கண்டால் சேமித்து ஆரோக்கியத்தை பெறவும்.