இயற்கை கொடுத்த வரப்பிரசாதம் கற்றாழை இதில் பல மருத்துவ குணங்கள் உள்ளது இதை உட்கொள்ளவும் முடியும் வெளிப்புறத்தில் பயன்படுத்திக்கொள்ளவும் முடியும் கற்றாழையை பச்சையாக அப்படியே பயன்படுத்தலாம் சந்தைகளில் விற்கப்படும் கற்றாழை ஜெல்லையும் பயன்படுத்தலாம் தலை குளிப்பதற்கு முன் இந்த ஜெல்லை தலையில் ஊரவைத்தால், முடி மென்மையாகும் தலை குளித்த பின், இதை சீரம் போல் பயன்படுத்தலாம் இதை தடவிய பின்னரே, முகத்தில் உள்ள தேவையற்ற ரோமங்களை நீக்க வேண்டும் இதை ஒரு மாய்ஸ்சுரைசராகவும் பயன்படுத்திக்கொள்ளலாம் மேக்-அப் போடுவதற்கு முன், இதை முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும்