பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவர் ஆலியா பட் இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான ஸ்டுடண்ட் ஆஃப் தி இயர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இவர் பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார் ஆலியா பட், கடந்த ஆண்டு பாலிவுட் முன்னணி நடிகரான ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ராஹா என்ற பெண் குழந்தையும் உள்ளது இவர் தற்போது கரண் ஜோகர் இயக்கத்தில் ரன்வீர் சிங்குடன் இணைந்து நடித்துள்ளார் அந்த திரைப்படத்தின் பெயர் ராக்கி ஆர் ராணி ப்ரேம் கஹானி அந்த படம் வரும் ஜூலை 28 ஆம் தேதி திரைக்கு வருகிறது அந்த படத்திற்கான தீவிர ப்ரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது தற்போது ஆலியா பதிவிட்டுள்ள இப்புகைப்படங்கள் வைரலாகி வருகிறது