பரபரப்பான காலை வேளை. காலை உணவு தயார் செய்வதே பெரும்பாடாகிவிடும். ஆனால், காலையில் சத்துள்ள உணவுப் பொருளை எடுத்துகொள்ள வேண்டும் என்கிறது மருத்துவ உலகம்.
அதற்கு காலை உணவில் முட்டை சேர்த்துக்கொண்டால் அன்றாடத்துக்கான முழு ஆற்றல் உத்தரவாதம்.
ஒரு முட்டையில், நம் உடலால் எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடிய அதிகத் தரமான புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது.
வைட்டமின் டி: இதன் மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும்.
ஆன்டிஆக்ஸிடன்ட்: இதிலிருக்கும் லூடின் (Lutein) மற்றும் சியாங்தின் கண் நோய்கள் வராமல், கண் புரை ஏற்படாமல் தடுக்கும்.
முட்டை, உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவி செய்யும். நம் அன்றாட உணவில் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம்..
முளைக்கட்டிய பச்சைப் பயிறு உள்ளிட்ட தானியங்களுடனும் முட்டையை எடுத்துக்கொள்ளலாம்.
வாரம் ஆறு முட்டைகளைச் சாப்பிடுபவர்களின் ரத்த அளவு ஒரே நிலையில்தான் இருக்கும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது..
முட்டையுடன் கோதுமை பிரெட் மற்றும் காய்கறிகள்தான் சத்தான கூட்டணி.
இறைச்சி, சீஸ், வெள்ளை பிரெட் ஆகியவற்றை இதனுடன் சாப்பிடக் கூடாது. முட்டையுடன் சாச்சுரேடட் கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது சிறந்ததல்ல. இதன் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிட்டாலே போதுமானது.
தினமும் ஒரு முட்டை, நல்ல உணவு, முறையான உடற்பயிற்சி என்று வாழ்ந்தால், ஹெல்தியாக இருக்கலாம்.