தேவையானவை 100 கிராம் அரிசி,250 கிராம் பனை வெல்லம், 300 மில்லி புதிதாகச் செய்த தேங்காய் பால், 3 ஏலக்காய், 50 கிராம் உலர்ந்த தேங்காய், 10 கிராம் முந்திரி பருப்பு, 10 கிராம் திராட்சை, 50 மில்லி நெய் அரிசியை கொதிக்கும் வெந்நீரில் 15 நிமிடம் ஊறவைக்கவும், நெய்யை சூடாக்கி முந்திரி, திராட்சை மற்றும் தேங்காய் துண்டுகளை தனித்தனியாக வறுக்கவும். பின்னர் அதனைக் கடாயில் இருந்து இறக்கவும். அதே கடாயில், நெய்யை சூடாக்கி, அரிசியை 4-5 நிமிடங்கள் குறைந்த தீயில் வறுக்கவும். இப்போது அரிசியுடன் வெல்லம் தண்ணீர் மற்றும் ஏலக்காய் சேர்த்து, அது கெட்டியாகும் வரை குறைந்த தீயில் சமைக்கவும். நன்கு கிளறிச் சூடாகப் பரிமாறவும். அடப்பிரதமன் ரெடி