தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் வரலட்சுமி சரத்குமார் இவர் பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார் 'போடா போடி' படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 50 படங்கள் நடித்துள்ளார் இவர் தற்போது தக்காளி விலை வாசி குறித்த வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் இந்தியாவில் காலநிலை மாற்றத்தால் தக்காளி விலை வரலாறு காணாத வகையில் ஏறி உள்ளது தக்காளி கிலோக்கு ரூ 200 மேல் விற்கப்படுகிறது நாடு முழுவதும் ஏற்படும் தக்காளி தட்டுப்பாட்டால் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர் நடிகை வரு தக்காளி மதிப்பு கைபேசி மதிப்பை விட அதிகம் என்ற அளவில் வீடியோ பதிவிட்டுள்ளார் இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது..