ரஜினியுடன் இணையும் தமன்னா...ஜெயிலர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இதோ !



நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ஜெயிலர்



மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஜெயிலர் திரைப்படத்தில் சிறப்பு தோற்றம் கொடுக்க இருக்கிறார்



தெலுங்கு நடிகர் சுனில் இத்திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்



ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னா இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது



இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் மலையாள நடிகர் விநாயகன் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளனர்



அனிருத் இத்திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார்



நடிகர்கள் யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்கின்றனர்



ரஜினியின் கேரக்டரான முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தின் தோற்றம் முன்னதாக அறிமுகம் செய்யப்பட்டது



ஜெயிலர் படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது