நெய் இல்லாத சமையலறைகளை இந்தியாவில் அவ்வளவு எளிதில் கண்டுபிடித்துவிட முடியாது ஆனால் நாம் உண்ணும் அனைத்து உணவிலும் நெய் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியமானது அல்ல என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள் ’saturated fat’ எனப்படும் நிறைவுற்ற கொழுப்பு, நெய்யில் உள்ளது இதை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது உடலில் கொழுப்பை அதிகரிக்கக் கூடும் இது இதயத்துக்கு பெரும் கேடு விளைவிக்கக் கூடும் எனவே நிறைவுற்ற கொழுப்போடு Monosaturated fat நிறைந்த கடலை, எள்ளு, ஆலிவ் எண்ணெய்யை உணவில் சேர்க்கலாம். மேலும், Polysaturated fat நிறைந்த சோயா, சன் ஃபளவர் எண்ணெய்களையும் சேர்க்கலாம். நேரடியாக நெய்யை சமையலில் பயன்படுத்தாமல் பருப்பு, தோசை என சில உணவில் மட்டும் சேர்த்து சாப்பிடுவதே உடலுக்கும் இதயத்துக்கும் நல்லது