தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் பல நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து வந்தவர் நடிகை மீனா.



கடந்த 2009ம் ஆண்டு ஜுலை 12-ம் தேதி நடிகை மீனாவுக்கும் பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகருக்கும் திருமணம் நடைபெற்றது



இவர்களது திருமண வரவேற்பு சென்னையில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் மஹாலில் நடந்தது



இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ், நடிகர் கமல்ஹாசன், லதா ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரைபிரபலங்களும் கலந்து கொண்டனர்



தொடர்ந்து, நடிகர் கார்த்தி, நடிகர் சிவக்குமார், இயக்குநர் பாக்யராஜ் அவரது மனைவி பூர்ணிமா, பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்



இவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார்



இந்த தம்பதி கடந்த 2021 ம் ஆண்டு ஜுலை 12 ம் தேதி தங்களது 13 ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினர்



இந்தநிலையில் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.



முன்னதாக, எக்மோ கருவியில் உயிர் வாழ்ந்து வந்த அவர் உடலின் பிற உறுப்புகளும் ஒவ்வொன்றாக செயலிழந்து போக சிகிச்சை பலனின்றி காலமானார்



பலரும் தங்கள் இரங்கல்களை சமூக வலைத்தளம் வாயிலாக மீனாவுக்கு தெரிவித்து வருகின்றனர்