ஜீவா நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் கோ இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை கார்த்திகா நாயர் இவர் 80களின் பிரபலமான நடிகையான ராதாவின் மகள் ஆவார் இவரும் ரோஹித் மேனன் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது இவர்கள் இருவருக்கும் நேற்று கேரளாவில் கோலகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது இவர்களது திருமண நிகழ்ச்சியில் நடிகை ரேவதி, ராதிகா, சுஹாசினி மணிரத்னம் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர் மேலும் ஜாக்கி ஸ்ரோஃப், சிரஞ்சிவி, பாக்கியராஜ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர் இவர்களது திருமணம் கேரளா, திருவனந்தபுரத்தில் மிகவும் சிறப்பாக நடந்துள்ளது கார்த்திகா - ரோஹித் தம்பதிக்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெர்வித்து வருகின்றனர் மேலும் இவர்களது திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது