சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஹாசினியாக மனதை கொள்ளையடித்தவர் ஜெனிலியா இவர் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் இவர் கடந்த சில நாட்களாக உடல் எடையை குறைக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டார் இதற்காக அவர் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்தார் உடல் எடையை குறைத்த பயணம் குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் அதில், ‘உடற்பயிற்சியை என் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாற்ற விரும்புகிறேன்’ என கூறியுள்ளார் உடற்பயிற்சி வெறும் எடை குறைப்பு மட்டுமல்ல எனவும் அவர் கூறியுள்ளார் நான் சந்தேகங்களுடன் இதை தொடங்கினேன் ஆனால் இன்று இலக்கை எட்டிவிட்டேன் என்று கூறியுள்ளார் ஜெனி இதற்காக அதிக நம்பிக்கையுடன் உழைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார் ஜெனிலியா 6 வாரத்தில் நான்கு கிலோ எடையை குறைத்துள்ளது குறிப்படத்தக்கது