நெட்ஃப்ளிக்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஹார்ட் ஆஃப் ஸ்டோன் இப்படத்தில் கால் கடோட், ஆலியா பட் மற்றும் ஜேமீ டோர்னன் இணைந்து நடித்திருக்கின்றனர். தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது தி ஹார்ட் என்ற கருவியை பயன்படுத்தி எந்த அரசை வேண்டுமானால் இவர்கள் கவிழ்க்கலாம் எந்த தொழில்நுட்பத்தை வேண்டுமானாலும் இருந்த இடத்தில் இருந்து கட்டுப்படுத்தலாம் ஒருவேளை இந்தக் கருவியை யாராவது திருடிக் கொண்டுபோனால் என்னவாகும்? அப்படியான நோக்கத்தில் வருகிறார் ஆலியா பட் இந்த கருவியை திருடிச்செல்லும் ஆலியா பட்டிடம் இருந்து மீட்க முயல்கிறார் கால் கடோட் இவர்கள் இருவருக்கும் இடையிலான சண்டைக்காட்சிகள் என விறுவிறுப்பாக ஒரு ட்ரெய்லராக அமைந்திருக்கிறது இப்படம் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக இருக்கிறது