விக்ரமின் இயற்பெயர் கென்னடி ஜான் விக்டர். இவர் 1966 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி பிறந்தார். அமராவதி படத்தில் அஜித்துக்கும், காதலன் படத்தில் பிரபுதேவாவுக்கும், அப்பாஸூக்கு காதல் தேசம் படத்திலும் பின்னணி குரல் கொடுத்தது விக்ரம் தான்..! 1990 ஆம் ஆண்டு தமிழில் அறிமுகமான விக்ரமுக்கு 1999ல் வெளியான சேது படம் திருப்புமுனையாக அமைந்தது ‘சீயான்’ என ரசிகர்களால் அழைக்கப்படும் விக்ரம் திரைக்கதைக்காக எந்த வேடமானாலும் ஏற்று நடிக்கக்கூடியவர் சேது, பிதாமகன், காசி, அந்நியன், ஐ, தெய்வதிருமகள், சாமி ஆகிய படங்கள் விக்ரம் திரை வாழ்க்கையில் மிக முக்கியமானவை தனது படங்களில் மட்டுமே பாடி வந்த விக்ரம் அதனைத் தவிர ஆர்யா நடித்த மதராசப்பட்டினம் படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார் விக்ரமின் தந்தை வினோத் ராஜ், மகன் துருவ் ஆகியோரும் தமிழ் சினிமாவில் நடித்துள்ளனர் சேது படத்திற்கு தேசிய விருது வென்றார். கமலுக்குப் பிறகு நடிப்புக்கான தேசிய விருதைப் பெற்ற 2வது தமிழ் நடிகர் ஆவார். விக்ரம் நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பராவார். இதனை இருவரும் பல இடங்களில் வெளிப்படுத்தியுள்ளனர் இருமொழிகளில் எடுக்கப்பட்ட ஒரே படத்தில் (ராவணன்) தமிழில் ஹீரோ, இந்தியில் வில்லனாகவும் நடித்த ஒரே இந்திய நடிகர் விக்ரம் என்ற பெருமையை பெற்றார்.