தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்து வருபவர் நடிகை வர்ஷா பொல்லம்மா. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர் தமிழில் ‘சதுரன்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். யானும் தீயவன்’, ‘சீமதுரை’, ‘வெற்றிவேல்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். வர்ஷாவுக்கு விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ‘96’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ படத்தில் திருமண ஆன பெண்ணாக நடித்தார். விஜயின் ‘மாஸ்டர்’ படத்திலும் நடித்தார். வர்ஷா தனது கண்களை தானம் செய்துள்ளார். நாம் இறந்த பிறகும் இந்த உலகை பார்க்க வேண்டுமெனில் அதற்கு கண் தானம் செய்ய வேண்டும் என நெகிழ்ச்சி.